நடிகர் கருணாஸ் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்…
விடுதலை சிறுத்தை கட்சியின் மதுவிலக்கு மாநாட்டிற்கு பாமக மற்றும் பாரத ஜனதா போன்ற சாதி மத கட்சிகளுக்கு அழைப்பு இல்லை என திருமா பேசி இருந்தார், இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மற்றும் அரசியல்வாதியான கருணாஸ் சாதி மத அமைப்புகளுக்கு அழைப்பில்லையா என தெரிவித்துள்ளார் மேலும் பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி என்று கேட்டுள்ளார், மேலும் சாதிக் கட்சி என்றால் எங்களுக்கு இந்த மக்கள் மீது அக்கறை இருக்கக் கூடாதா இந்த மக்கள் தினந்தோறும் குடித்து சாவதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா என வினாடி உள்ளார், மேலும் கட்சிகளுக்குள் வேறுபாடு பிழை திருத்தங்கள் மன சலனங்கள் இருக்கலாம் ஆனால் மக்கள் என்றால் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், மக்களுக்காக தான் நாம் அரசியல் நடத்துகிறோம் நமது சண்டைகளுக்கு சச்சரவுகளுக்கோ அல்ல மக்களின் நலனுக்காக நாங்கள் அனைவரும் செயல்படுவோம் என்று நடிகர் மற்றும் அரசியல்வாதியான கருணாஸ் அறிவித்துள்ளார்..!!




