
தமிழ் சினிமாவில் காமெடி சூப்பர் ஸ்டாராக சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், பிரதீப் ராம் சிங் உட்பட பலபேர் நடித்துவரும் படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ். இந்த திரைப்படத்தை ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துக் கொண்டு வருகிறது.
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கி வழங்கி இருக்கிறார். படம் காமெடி கலந்த திரில்லராக இருக்கிறது. சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல வரவேற்பு அளித்த நிலையில், அதே பாணியில் டிடி ரிட்டன்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சந்தானத்திற்கு நல்ல வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பிரமுகர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. அப்போது படத்தை பார்த்த இயக்குனர் சோலை ஆறுமுகம் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் படம் செமையாக இருக்கிறது. படம் முழுக்க காமெடி.
நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தரமான வெற்றி படம். இரட்டை அர்த்த வசனம் இல்லை. கிளாமர் இல்லை. படம் முழுவதும் வயிறு வலிக்கும் அளவுக்கு காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன் மற்றும் முனிஸ்காந்த் கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்க தரமான பொழுதுபோக்கு படம். பல காட்சிகளுக்கு கைகளை தட்டி கை வலியே வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் திரைத்துறை நிருபர் செய்யாறு பாலு “சைக்கோ சக்தியில் கோடம்பாக்கத்தை போட்டு புரட்டிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அடிவயிறு அலசராகிவிடும் அளவிற்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம் தான் டிடி ரிட்டன்ஸ் என்று தெரிவித்திருக்கிறார்.