தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த சந்தானம் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக அவதாரம் எடுத்து நடித்து வருகின்றார்.
அவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற“ டிடி ரிட்டன்ஸ்” என்ற திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று பூஜை தொடங்கியுள்ளது, தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யா, நிஹாரிகா என்டர்டைன்மெண்ட் மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார், இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய இயக்குனர் பிரேம் ஆனந்த் “கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியான டிடி ரிட்டன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த ஒரு வருடம் பெரும் செல்வத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து மகிழும் திரைப்படம் அமையும். மிக அதிக பொருட்செளவில் உருவாக உள்ள திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டைமென்ட்., நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி, டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை விட அதிக குதுகலத்தையும், உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு திரைப்படத்தில் அடுத்த பாகத்திற்கான பூஜை திரை உலகினார் மற்றும் பல குழுவினர் முன்னிலையில் இன்று நடந்த நிலையில் படபிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.