நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

“கொரோனா குமார்” படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் பட நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சரவணன், தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் என விளக்கம் அளித்தார். ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ.4.5 கோடி ரூபாய்  முன்பணமாக அளிக்கப்பட்ட நிலையில், படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்கக் கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் வழக்கு தொடர்ந்திருந்தது.

Read Previous

விவசாயம் எங்கே செல்கிறது; நீதிமன்றம் வேதனை..!!

Read Next

சாதிவாரி கணக்கெடுப்பு என்றாலே பலருக்கு அச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular