
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் 20 24 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழியில் வாழ்க்கை வரலாற்று போர் திரைப்படமாகும், மேலும் இது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியாவுடன் இணைந்து தயாரித்தது, மேலும் திரைக்கு வந்து சில நாட்களிலேயே அமரன் படம் பெரும் வெற்றியை எட்டியுள்ளது என தொடர்ந்து மக்களிடையே பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றுள்ள நிலையில் அமரன் பட குழுவுக்கு தமிழக முன்னாள் CRPF நலன் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளது, படத்தில் தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்ப்பு வினையும் ஆற்றாமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையையும் அதிர்ச்சியும் அளிப்பதாக கூறியுள்ளனர் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் தீபாவளி ஒட்டி வெளியான திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடி வருகிறது, மேலும் சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் சார்பாக தொண்டர்கள் அமரன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்…!!