நடிகர் டெல்லி கணேஷ் மறைவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்…!!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்…

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார், அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்த நிலையில் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் கூறியது : மூத்த திரை கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனடைந்தேன். நாடகத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர் டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், அவரது நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்ன திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார், முத்தமிழ் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…!!

Read Previous

தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு.‌.!!

Read Next

நடப்பு கல்வி ஆண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது ஒடிசா அரசு…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular