
தெலுங்கு, இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர்தான் ராஷ்மிகா மந்தானா. இவர் “வேல்டு க்ரஸ்” எனவும் அழைக்கப்படுகின்றார். இவர் “வாரிசு” படத்தில் தளபதி விஜய் உடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
இவர் தற்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சிக்கந்தர்” என்கின்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் தனுசுடன் தமிழில் முதல் முறையாக ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சேகர் கம்மூலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துவரும் “குபேரா” என்கின்ற படத்தில் ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானாவின் முதல் தோற்றம் வருகின்ற ஐந்தாம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் “அனிமல்” திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலம் அடைந்த ராஷ்மிகா மந்தானா தற்பொழுது “குபேரா” படத்தில் தனுசுடன் இணைய இருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.