
நடிகர் திலகம் சிவாஜியின் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என்ற எல்லாவற்றையும் ரசித்தவர்கள் நம் இந்தியர்கள் நம் இந்தியர்கள் மட்டுமல்ல அவர்களைத் தாண்டியும் பல ரசிகர்கள் நடிகர் சிவாஜிக்கு உண்டு. நடிகர் சிவாஜியின் வீர வசனங்கள் எல்லாம் நம் மனதுக்குள் இன்றும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது திரைப்படம் ஆக பல நேரங்களில் ஊக்கம் தரக்கூடிய வரிகள் ஆகும் இருக்கிறது அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாறை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம் தான்…
நடிகர் திலகம் சிறுவயதில் கம்பளத்தார் கூத்து என்ற பெயரில் நடக்கும் கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து பார்த்து தன்னை கட்டபொம்மனாகவே உருவகப்படுத்திக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் அவருடைய உள்ளத்திலே நிறைந்து இருந்தது…..
திரை உலக பிரவேசம் செய்த பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாடகமாக நடத்த வேண்டும் என்று பேரவா கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். திரைப்படமாக வருவதற்கு முன்பு அந்த நாடகம் 112 முறை நாடகமாக நடத்தப்பட்டுள்ளது 112 முறை நாடகமாக நடத்தப்பட்டதில் வந்த வருமானமான 32 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகைகளை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வாரி வாரி வழங்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பற்றிய ஒரு சுவையான தகவல். நூத்தி பன்னிரண்டு முறை மேடையேற்றம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் 111 முறை மட்டுமே தூக்கிலிடப்பட்டார்.
ஒரே ஒரு முறை அவர் தூக்கிலிடும் காட்சி நிறுத்தப்பட்டது அதற்கு காரணம். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை ஒரு தடவை காண வந்தார்.
நடிகர் திலகத்தின் நடிப்பிலும் நாடகக் காட்சிகளிலும் தன்னை மறந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த போது அவர் தன்னை மறந்து கட்டபொம்மனை தூக்கிலிடாதீர்கள் தூக்கிலிடாதீர்கள் என்று சொல்லியபடியே மயக்கம் அடைந்து விட்டார். உடனே நாடகம் நிறுத்தப்பட்டு நடிகர் திலகம் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து ராஜாஜி அவர்களை, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி சமாதானப்படுத்தினார்.
ராஜாஜி அவர்கள் நடிகர் திலகத்திடம் உங்கள் நடிப்பில் நான் என்னை மறந்து விட்டேன்… உணர்ச்சி வசத்தில் கத்தி விட்டேன் என்று கூற…
ராஜாஜி அவர்களின் விருப்பப்படியே அன்றைய நாள் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடும் காட்சி இல்லாமலேயே நாடகம் முடிக்கப்பட்டது. கூத்து நாடகம் சினிமா போன்றவற்றில் விருப்பமில்லாத ஒரு தலைவர் ராஜாஜி அவர்கள், அவரையே தனது உணர்ச்சிகரமான நடிப்பினால் உணர்ச்சிவசப்பட வைத்தவர் நடிகர் திலகம் அவர்கள். இதே போல் நடிகர் திலகம் நடித்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து நான் படத்தில் சிவாஜி கணேசன் பார்க்கவில்லை பரதனை கண்டேன் என்று மனப்பூர்வமாக பாராட்டினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள். நடிகர் திலகத்துக்கு இதை விட வேறு என்ன விருது வேண்டும் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம் விருதுகளே பார்த்து வியந்த நடிகர் நமது நடிகர் திலகம் அவர்கள்…!!