
- காமெடி கதாபாத்திரங்களில் முன்னாடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மயில்சாமி. இவர் பலரை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமானோரின் பசியையும் போக்கி உள்ளார்.அவரின் குடும்பத்தில் தற்போது பிரச்சனை என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து உள்ளார். சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியிருக்கிறார்.
இவர் நடிகர் ஆவதற்கு முன்பு பல பணிகளை செய்து தான் நடிகர் என்ற உயர் பதவிக்கு வந்திருக்கிறார். இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் , இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மயில்சாமி இறந்து போன நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவரது குடும்பத்தில் சோகமான விஷயங்கள் நடந்து கொண்டே வருகிறது. அதாவது மயில்சாமியின் மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
தற்போது இருவரின் மனைவிகளும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர். வீட்டில் மாமியார்-மருமகள் சண்டை அதிகமாக இருப்பதால் தான், விவகாரத்திற்கு இருவரும் சென்று உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.