
சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் காவியா அறிவுமணி.
அந்த சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதாவது அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா உயிரிழப்பை தொடர்ந்து அவருக்கு பதிலாக முல்லையாக நடித்து பிரபலமானார் காவியா அறிவுமணி.
இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பின்னர் படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வந்தார்.
அதன்படி வெள்ளி திரையில் மிரர், ரிப்பர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தொடர்ந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிறத்தில் கிளாமர் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram