
ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கு அவர்களை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசா வழங்குகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்புவிற்கு இந்த விசாவினை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த விசா வழங்கப்படுவோருக்கு அந்த நாட்டின் குடிமக்களின் உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் வழங்கப்படும். உதாரணமாக அந்த நாட்டின் குடிமகனை போன்று வேலையில் சேரலாம், புதிய தொழில் தொடங்கலாம்.
இதனை பயன்படுத்தி 10 ஆண்டுகள் அந்த நாட்டில் இருக்கலாம். இதைப்பெற்றவர்கள் அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லலாம். இந்த விசா ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான், போனிகபூர் போன்றோருக்கும். மைலயாள நடிகர் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டடுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது குஷ்புவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.