
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி என்ற படத்திலும், வெப் தொடரிலும் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை சமந்தா சமீப நாட்களாக மையோசிடிஸ் சென்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதனால் சினிமாவிலிருந்து சிறிது காலத்திற்கு ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இதன்படி புகழ்பெற்ற தனியார் நிறுவனம் நடத்திய ஜூன் மாத கருத்துக்கணிப்பில் 2023 ஆம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்தது மிகப்பெரிய பெருமைக்குரியது.
அந்த வகையில் சமந்தா எட்டாவது முறையாக இந்த கௌரவத்தை பெற்றிருக்கிறார். சமந்தாவுக்கு அடுத்தபடியாக ஆலியா பட் , நயன்தாரா, தீபிகா படுகோன், காஜல் அகர்வால், திரிஷா, கேத்ரினா கைஃப், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தான முறையை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.