நடிக்க சான்ஸ் கிடைக்கலன்னா அந்த வேலை செய்திருப்பேன்..!! மாளவிகா Open Talk..!!

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் ஹிந்தி மற்றும் தமிழ் என தொடர்ச்சியாக நடித்து வந்தபோது பேட்ட திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

தற்ப்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 வெளிவர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாளவிகா, ” எனக்கு வைல்ட் லைப் போட்டோகிராபி என்றால் மிகவும் பிடிக்கும் ஒருவேளை நடிக்க வராமல் இருந்திருந்தால் போட்டோகிராபராகி இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Read Previous

ஒரு நாளில் எத்தனைமுறை உறவு கொண்டால்.. உடனே கருத்தரிக்க முடியும்?..

Read Next

சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular