நடுக்கடலில் ஒரு திரையரங்கம்..!! மிதந்தபடி படம் பார்க்கலாம்..!!
தாய்லாந்தில் உள்ள குடு என்கிற தீவில் ஆர்கிபெலாகோ சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. திரையரங்கம் என்றால் ஒரு அறையில் இல்லை, நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த தியேட்டரில் நைட் ஷோ மட்டும் தான் படம் திரையிடப்படுமாம். கடலுக்கு நடுவே மிதக்கும் ரேப்டில் அமர்ந்து இங்கு படம் பார்க்க முடியும். கடலில் மிதந்தபடி படம் பார்க்க வேண்டும் என்பதால் நாற்காலிகளை தவிர்த்து ரசிகர்கள் அமர பீன் பேக்கை பயன்படுத்தியுள்ளார்கள்.