நடுவழியில் பிரசவம்; தாய்-சேயை நலமுடன் பாதுகாத்த அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ குழுவினர்.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசர ஊர்தியில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஓட்டுனர் மற்றும்  மருத்துவ குழுவினருக்கு மக்களிடையே பாராட்டு குவிந்து வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசர்குளம் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. நிறைமாத கற்பிணியாக இருந்து வந்த சத்யாவுக்கு இன்று திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து  உள்ளனர். உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

ஆனால் வழியிலேயே சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே உடனடியாக அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பிரசவத்தில் சத்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இரண்டு உயிர்களையும் காப்பாற்றிய அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Read Previous

கியூட் லுக்கில் அசத்தும் சிவகார்த்திகேயன்..!! வைரல் கிளிக்ஸ் இதோ.!!

Read Next

களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்..!! கல்லூரி மாணவி சாதனை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular