அமரிக்காவின் சியாட்டி நகரத்தில் இயங்கிவரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் பயணித்த எரிக் நிகோலஸ் காப்கோ (26) என்ற இளைஞர், அந்த விமானத்தில் பணியில் இருந்த பணிப்பெண்ணை உடலுறவுக்கு அழைத்துள்ளார். பலமுறை இவ்வாறு வற்புறுத்திய நிலையில் அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். பின்னர் திடீரென விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். அவரை பிடித்துசக பயணிகள் கட்டிவைத்தனர். இதையடுத்து சால்ட் லேக் சிட்டியில் விமானம் தரையிறக்கப்பட்டு போலீசில் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார்.