
நடைப்பயிற்சியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கட்டாயமா படிங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் தன் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். உணவு முறையை எவ்வளவு முக்கியமாக பின்பற்ற வேண்டுமோ அதே போலத்தான் நம் உடலை பாதுகாக்கவும் கட்டமைப்பாக வைத்துக் கொள்ளவும் உடற்பயிற்சி நடை பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த வகையில் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதால் உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். என்பதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது. நடைப்பயிற்சியின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும். மற்றும் நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் கலோரிகளை எரிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும், நடைப்பயிற்சி செய்வதன் மூலம் முதுகு நரம்புகள் உறுதியாகும். எலும்புகள் வளர்ச்சிக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. உடலை உறுதியாகவும் கட்டமைப்பாகவும் வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவை இந்த நடைப்பயிற்சி குறைக்கிறது. தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலிமையாகும். மனதுக்கு மகிழ்ச்சியை தந்து புத்துணர்ச்சியும் இந்த நடைப்பயிற்சி ஏற்படுத்தும். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும். நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். எப்போதும் இளமையாக இருக்க இந்த நடைப்பயிற்சி உதவும். மக்களே தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி செய்து உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையிடனும் வைத்துக் கொள்ளுங்கள்.