நடைப்பயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகுமா அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!!

நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மூட்டு தேய்மானம் ஏற்படுவதாக பலரும் கூறுகின்றனர் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் உண்மையா என்று..

மூட்டு தேய்மானம் இடுப்பு தேய்மானம் உள்ள போது நடக்கலாமா என்று பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. நடந்தால் வலிக்கிறது என்று நடக்காமல் இருந்தால் மூட்டுகளில் உள்ள திரவம் மேலும் குறைந்து பிரச்சனை இன்னும் பெரிதாகும். நடக்கும்போது தான் மூட்டுகளின் உட்பகுதி தூண்டப்பட்டு திரவத்தை சுரக்க செய்யும் நடைபயிற்சி உடற்பயிற்சிகளை செய்யும்போதுதான் தசைகள் வலிமை அடையும். சீரான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் தினசரி நடை பயிற்சி செய்வதுதான் மூட்டுகளுக்கு நல்லது. இதுவரை நடை பயிற்சியே செய்ததில்லை என்றால் எடுத்த உடனேயே ஒரு மணி நேரம் அரை மணி நேரம் என்று நடப்பது நல்லதல்ல. இது மூட்டுகளில் வலியையே ஏற்படுத்தும். பிரச்சனை மேலும் பெரிதாகும் தினமும் நிதானமாக 15 நிமிடங்கள் நடந்தால் போதும். இதைப்போன்று ஓரிரு மாதங்கள் செய்த பின் சிறிது சிறிதாக நேரத்தை தூரத்தையும் அதிகரிக்கலாம் நடக்கும்போது மூட்டுகளில் உட்பகுதி தூண்டப்பட்டு திரவம் சுரக்கும். ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடிஸ்ஸை பொறுத்தவரை 90 சதவீதம் பேருக்கு வலி நிவாரணி நடைபயிற்சி பிசியோதெரபி மூலம் பிரச்சனைகள் கட்டுக்குள் வந்து விடுகிறது. நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது இந்த தகவல்களை பின்பற்றுங்கள்..!!

Read Previous

இரவு முழுவதும் தூக்கத்தை சீராக்க உதவும் பூண்டு இப்படி பயன்படுத்தி பாருங்கள் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்..!!

Read Next

டிரான்ஸ்பார்மரில் மயங்கி விழுந்த மின் ஊழியர்..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular