
- நண்டு மிளகு சூப் செய்முறை
தேவையான பொருட்கள்:
* நண்டுகால் கிலோ
* மிளகுத் தூள்2 டீஸ்புன்
* சீரகத் தூள்1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* தக்காளி1
* எலுமிச்சை சாறுஅரை டீஸ்புன்
* கொத்தமல்லி தழை1 கைப்பிடி
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நண்டைப் போட்டு தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், இஞ்சி புண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சூடாக பரிமாறவும்.