நண்பனின் மனைவியை அபகரிக்க நினைத்த தோழன்..!! வேலை வாங்கிக்கொடுப்பதாக பச்சை துரோகம்.!!

தோள் கொடுப்பவன் தோழன் என்ற விஷயம் அனைத்து இடத்திலும் சரியாக அமையாது பெண்களை போதை பொருளாக பார்க்கும் இந்த உலகில் நாம் சுதாரிப்புடன் தான் இருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள வடமதுரை பிஜி  புதூர்  பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வசித்து வருகின்றனர். இருவரும் வேலையில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த கணவரின் நண்பர் தரண் (வயது 19) என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவர் இருவரையும் கோபிசெட்டிபாளையத்திற்கு வர சொல்லியுள்ளார்.

அங்கு நிதி நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என நண்பனின் மனைவியை தன்னுடன் அழைத்து சென்றவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து வெளியே கூறினால். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். வீட்டிற்கு சென்ற பெண்மணி கணவரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞர் தரணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நட்பை உயர்வாக போற்றி உள்ள வள்ளுவர் தான் அதே நட்பை மற்றொரு இடத்தில் தூற்றி உள்ளார்.

Read Previous

யோகிபாபுவின் “ஜோரா கைய தட்டுங்க” பட அப்டேட்; பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!!

Read Next

மதுபானம் குடித்தவர் மர்ம மரணம்..!! சீர்காழியில் நடந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular