நமது அன்றாட பணிகளை எளிமையாக உதவும் சில குறிப்புகள் அவசியம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

நமது அன்றாட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பலரும் எண்ணுவார்கள் இதற்கான தேடலிலும் ஆர்வங்களிலும் ஈடுபடுவார்கள் அப்படி பட்டவர்களுக்கான ஒரு புதிய பதிவு தான் இது..

பூண்டு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை அளிக்க கூடியதாகும் ஆனால் அதனை உரிப்பதற்கு தான் பெரிய டாஸ்க் சிறிதளவு பூண்டு உரிப்பது பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில் கிலோ கணக்கில் பூண்டுகளை உரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பின்னர் அதன் மீது பூண்டுகளை போடவும் தீயை குறைத்துவிட்டு கூண்டுகளின் தோல் மீது சூடு ஏறும்படி அதனை திருப்பி போட்டு எடுங்கள் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்களில் பூண்டுகள் மீது சூடு ஏறிவிடும். சூடேறியப்புண்டுகளை தனியே எடுத்துக் கொண்டு அதன் மீது அரிசிமாவினை கொட்டவும் பிறகு ஒரு பெரிய பையில் இந்த பூண்டுகளை போட்டு தரையில் நன்றாக தட்டி விடுங்கள் இப்படி செய்தால் பூண்டின் தோள்கள் அனைத்தும் தனியே வந்துவிடும். பூ கட்டவும் அதிக நேரம் எடுக்கும் அதற்கு உங்களுக்கு ஜல்லி கரண்டி உதவும் கரண்டியின் கைப்பிடியில் இருக்கும் கீழ் துவாரத்தில் நூலின் ஒரு முனையை கட்டி மற்றொரு முனையை கரண்டியின் மேற்பகுதியில் கட்டிக்கொண்டு மீண்டும் அதனை கீழே கரண்டியின் நுனிப்பகுதியில் கொண்டு செல்லுங்கள். இப்பொழுது நீங்கள் பூக்களை இறுக்கமாக கட்டிய நூலில் வைத்து கட்ட துவங்கலாம். இம்முறையை நீங்கள் பின்பற்றினால் பூக்களின் நெருக்கமாக கட்ட முடியும் கட்டி முடித்த பின்னர் மீதும் உள்ள நூலை வெட்டிவிட்டு பூக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாய் ஆறு மிளகு ஒரு பூண்டு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்னர் அதனை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டின் கிச்சன் முதல் அனைத்து பகுதிகளிலும் ஸ்பிரே செய்து விடுங்கள் இதன் மூலம் வீட்டில் பள்ளிகள் கரப்பான் பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லைகள் நீங்கும்.வாழைப்பழங்களை மொத்தமாக வாங்கி வரும் பட்சத்தில் அது சீக்கிரத்தில் அழுகாமல் இருக்க பழங்களின் காம்பு பகுதிகளை சில்வர் பேப்பரில் கொண்டு சுற்றி வையுங்கள் இப்படி செய்தால் பழங்கள் அழுகி வீணாகுவது தடுக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் வெள்ளை துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலம் மூணு துளிகளை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அந்த தண்ணீரில் நாம் துடைக்க பயன்படுத்தும் துணிகளை நனைத்து மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் கட்டில்கள் ஜன்னல்கள் போன்ற பொருட்களை தொடையுங்கள் இப்படி செய்வதால் எளிதில் சுத்தப்படுத்தி விடலாம்..!!

Read Previous

சைவ இறைச்சியில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள் சைவ பிரியர்கள்..!!

Read Next

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular