
ரத்தமூலம் நுரையீரல் பிரச்சனை நரம்புத்தளர்ச்சி பாதிப்பு என அத்தனை நோய்களுக்கும் உடனடி தீர்வை தரக்கூடிய சின்ன வெங்காயம், உணவில் மட்டுமல்ல மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத பலனை அளிக்க கூடியதாக இருக்கிறது…
100 கிராம் சின்ன வெங்காயத்தில் 72 கலோரிகள் மட்டும் தான் உள்ளன ஆனால் கார்போஹைட்ரேட்கள் 16.8 கிராம், சர்க்கரைகள் 7.9 கிராம், நார்ச்சத்து 3.2 g புரதம் 2.5 கிராம், கொழுப்பு 0. 1 கிராம் வைட்டமின் சி 8 மில்லி கிராம், வைட்டமின் ஏ 2 மில்லி கிராம், கால்சியம் 37 மில்லி கிராம், இரும்பு 1.2 மில்லி கிராம், பொட்டாசியம் 334 மில்லி கிராம், போலெட், வைட்டமின், பி9 34 மில்லி கிராம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது இதைத்தவிர ப்ளவனாய்டுகள்,குவர்செடின், சல்பர் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது…
ரத்தம் உறைதல் அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மையும் சின்ன வெங்காயத்துக்கு உண்டு. மண்ணீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது.
நம்முடைய உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதற்கு சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஆக்ஸிஜன் என்று அழுத்தம் உண்டாவதை சின்ன வெங்காயம் தடுக்கிறது இதனால் செல்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் முன்கூட்டியே தடுக்கிறது. டீ காபி அதிகமாக சாப்பிட்டு உடலில் பித்தம் நிறைந்து விட்டால் நான்கு சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து சிறிது வெள்ளத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும் அஜீரணம் மலச்சிக்கல் இருந்தால் நார்ச்சத்து அதிகமான சின்ன வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வேண்டும் இளைப்பு வாதம், பித்த கிறுகிறுப்பு ஈரல் கோளாறு போன்ற உபாதைகளும் சின்ன வெங்காயத்தின் மூலம் குணப்படுத்தலாம்..
மூல நோயாளிகளுக்கு மருந்து : மூல நோயாளிகள் தவிர்க்கவே கூடாது சின்ன வெங்காயம் 50 கிராம் வெங்காயத்தை சாராக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வரும்போது ரத்தம் மூலமும் கட்டுக்குள் வரும் அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி சிறிது இலவம் பிசின் சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மூல கோளாறுகள் நெருங்காது வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கக்கூடாது நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடை குறைப்புறும் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம் இந்த சின்ன வெங்காயத்தின் சாறு கொழுப்பை கரைக்கக் கூடியது…!!