
நமது கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றக்கூடிய அதிசய கோவில் உள்ளது..
நேரமே சரியில்லை என்று நினைப்பவர்கள் நம்மிலும் பலர் உண்டு, சின்ன சின்ன செயலுக்கும் கூட நேரம் சரியில்லை காலம் சரியில்லை என்று சொல்பவர்களும் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் நேரத்தை சரி செய்வதற்கு ஒரு சிறந்த கோவில் தமிழ்நாட்டில் உள்ளது என்பதை நாம் இதுவரை அறிந்தே இல்லை, இனி நேரம் சரியில்லை என்று புலம்ப வேண்டாம் அந்த கெட்ட நேரத்தை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஸ்ரீ கால தேவி திருக்கோவில் ராஜபாளையத்தில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது, ராஜபாளையம் செல்லும் வழியில் சிலார்பட்டி என்ற கிராமத்தில் இந்த சக்தி வாய்ந்த கோவில் உள்ளது, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும், இரவு முழுவதும் பக்தர்களுக்கு அம்பாள் காட்சி தருகிறாள், நம்முடைய கெட்ட நேரமே நல்ல நேரமாக மாறும் என்று அம்பாள் மாற்றுகிறாள் என்றும் அங்கு சென்று வருகிற பக்தர்கள் பலரும் கூறுகின்றனர், நம்பிக்கையோடு ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்து சென்றால் நமது கெட்ட நேரம் எல்லாம் நீங்க நல்ல நேரம் வரும் என்றும் கூறுகின்றனர்..!!