நமது நியாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்..? அசத்தல் டிப்ஸ் இதோ.!!

நாம் ஒவ்வொரு செயலிலும் கவனமாக ஈடுபடுவதும், மந்தமாக ஈடுபடுவதும் நமது நியாபக சக்தியை பொருத்தே  அமைகிறது, பார்த்தவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் அறிவுத்திறன் மிக்க நபர்கள் முதல் எளிதில் நினைவுகளை மறக்கும் உள்ளவர்கள் வரை பலரும் இவ்வுலகில் உள்ளோம்.

இதில் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதே ஞாபக சக்தி குறைவதற்கான காரணமாய் அமைகின்றது. மூளையின் செயலை திறம்பட மேம்படுத்தி நமது நினைவாற்றலை சில உணர்வுகள் அதிகரிக்கும். அவ்வப்போது நமது உணவில் மீன் சேர்த்துக் கொள்வது மிக நன்று மீனில் உள்ள ஒமேகா 3, கொழுப்பு மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது. அதிக ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகையாக  கருதப்படும் வால்நட் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அல்சைமர் மற்றும் இதய நோய் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் வால்நட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் பி6, பி12 நுண்ணூட்டச் சத்துக்கள்  நிறைந்து காணப்படுகிறது.

இதில் உள்ள கோலின் என்ற வேதிப்பொருள் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் கருவில் நிறைந்திருக்கும்.தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தி அபரீதமாக வளரும் பூசணி விதையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் செல்களின் ஆரோக்கியத்தை புதுப்பிக்கும். அதுபோல நச்சுக்கள் உருவாகும் வாய்ப்புகளை தடுக்கின்றது.

மூளைக்கு தேவையான நுண் சத்துக்களை இவை வழங்குவதால் மன அழுத்தம் மற்றும் அல்சைமர்  போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும். கொண்டைக்கடலையில் உள்ள புரதம், மெக்னீசியம், கார்போஹைட்ரேட் போன்றவை மூலிகை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதுபோல ஞாபக சக்தி அதிகரிக்க திறனும் இதற்கு உண்டு.

Read Previous

உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

Read Next

பருவகால நோய்கள் நம்மை உடனடியாக தாக்குவதற்கு காரணங்கள் என்னென்ன..? லிஸ்ட் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular