
முயற்சிகள் எடுக்கும் போது தோல்விகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் அதற்காக மனம் வருத்தப்பட்டு அந்த செயலை செய்யாமல் நின்று விடுவதில் பலம் எதுவுமில்லை. அதையும் தாண்டி ஒருவர் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்திக்கும்போது அவரது மனம் துவண்டு போவது சகஜம் தானே அந்த நிலையை மாற்றி மனதிற்கு உற்சாகத்தை தரும் வழிமுறைகளை அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்…
தோல்வியினால் மனம் துவண்டு வருத்தப்படும் நிலையை முதலில் ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்னுடைய தோல்விகள் எனக்கு வருத்தத்தை தருகிறது என்று ஏற்றுக்கொள்ளும் பொழுது நமது மனதில் இருக்கும் பாதி சுமைகள் குறையும் மாறாக வருத்தத்தை அடக்கவோ அல்லது மறைக்கவும் முயற்சிக்கும் போது அது கடினமான மன அழுத்தத்தை தரும்…
தோல்விகள் வாழ்வின் இயல்பான ஒரு விஷயம் எல்லாருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் தோல்வியை அனுபவிக்கிறார்கள். எனவே இதை நினைத்து வருத்தப்படவோ அல்லது மனமுடைந்து போகவோ தேவையில்லை என்கிற உண்மை புரியும் இந்த உலகில் நீங்கள் மட்டுமே முதல்முறையாக தோல்வியடையவில்லை அல்லது உங்களுக்கு மட்டுமே தொடர் தோல்விகள் கிடைக்கப் போவதுமில்லை எல்லோரும் எல்லாவற்றையும் கடந்து செல்கிறார்கள் நீங்களும் இதையும் கடந்து சென்றால் வாழ்க்கை அழகாக மாறும்..
மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நண்பரிடம் காட்டும் அதே கருணை மற்றும் புரிதலை உங்களுக்கு நீங்கள் காட்டுங்கள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன். அதனால் என்னை நான் அன்புடன் அக்கறையுடன் பார்க்கிறேன் என்று மனதார உணர்ந்து உங்களுக்குள் நீங்களே பேசிக் கொள்ளுங்கள் இதனால் உங்களுக்குள் நிறைய மாற்றங்கள் கிடைக்கும். அதேபோல் உங்களையே நீங்கள் பகுப்பாய்வு செய்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் இப்படி செய்யும் பொழுது உங்கள் தோல்விக்கான காரணத்தை உங்களால் மிக எளிதில் கண்டுகொள்ள முடியும். தோல்விகள் தந்த மன அழுத்தத்தினால் உடல் ஆரோக்கியம் சீர் கெட்டி இருக்கும் போதுமான தூக்கமும் சத்தான உணவும் இன்றி உடலும் மனதைப் போலவே தளர்ந்து இருக்கும் எனவே முதலில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் வழக்கமான உங்கள் நடைப்பயிற்சி உடற்பயிற்சி அல்லது மனப்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி அவற்றை ஆரோக்கியமான முறையில் தினம் தோறும் கடைபிடியுங்கள் இப்படி செய்யும் பொழுது உங்கள் மனமும் ஆரோக்கியமடையும் உடலும் ஆரோக்கியம் அடையும் இவற்றை தொடர்ந்து செய்தால் விரைவில் தோல்விகள் மறைந்து வெற்றி உங்களை வந்தடையும்..!!