
செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழக வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார். குரோஷியாவில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனை, குகேஷ் எதிர்கொண்டார். ஏற்கனவே நார்வேயில் நடந்த போட்டியில் கார்ல்ஸனை குகேஷ் வீழ்த்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவரை தோற்கடித்து அசத்தியுள்ளார். நடப்பு போட்டியில் குகேஷ் முதலிடத்தில் உள்ளார்.