நம்பிக்கை நிறைந்த மனிதர்கள் எவரிடத்திலும் மண்டியிடுவதும் இல்லை..!! பிச்சை கேட்பதும் இல்லை..!!

யார் நம்பவில்லை என்பதற்காக
நீங்கள் வலிமை இழந்தவர்களாக
மாறிப்போய் இருக்கிறீர்கள்……..
நிழலுக்கு தான் உருவம் வேண்டும்
நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்…..
உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,
அவர்கள் கடந்து போகட்டும் என்று
தள்ளியே இருங்கள்….
நெருப்பு தொட்டால் சுடும் என்பது
அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை….
உங்கள் உண்மை யாருடைய
இதயங்களையெல்லாம் காயப்படுத்துகிறதோ…
அங்கே நீங்கள் மருந்திட
வேண்டிய அவசியமில்லை.
சில இடங்களில் தனிமை மட்டும் தான்
தன்மானத்தோடு வாழ வைக்கும்…..
உங்கள் முன்னேற்றத்தை கண்டு
யாரெல்லாம் பழிக்கிறார்களோ,
அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்
நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தான் உண்மை…..
ஒருவரின் புறக்கணிப்பு …..
ஒருவருடைய ஏமாற்றம் …..
ஒருவருடைய தவறு ….
ஒருவரது நம்பிக்கை துரோகம் ….
என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்
கடைசியில் திரும்பிப் பார்க்கும் பொழுது
எல்லோரும் எங்கோ நின்று கொண்டிருப்பார்கள்……
கூட்டமாய் மேயும் ஆடுகளாய் வாழ்வதைவிட,
தனித்து வாழும் சிங்கமாய்
வாழ்ந்து விடுவது சிறப்பானது…..
நீங்கள் அழுவதாய் இருந்தால் அழுது விடுங்கள்.
கோபம் வந்தால் கோபப்பட்டு விடுங்கள்.
ஆத்திரம் தீரும் வரை வேண்டுமானால்
சப்தம் போட்டு விடுங்கள்….‌..
அமைதியாய் மட்டும் இருந்து விடாதீர்கள்……
அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்
கொட்டுவதில் தான் இருக்கிறது……
நம்பிக்கை நிறைந்த மனிதர்கள்
எவரிடத்திலும் மண்டியிடுவதும் இல்லை…
பிச்சை கேட்பதும் இல்லை…..
அது உணவாக இருந்தாலும் சரி ….
உண்மையான அன்பாக இருந்தாலும் சரி……

Read Previous

அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வெல்லத்தில் இருக்கும் நன்மைகள்..!!

Read Next

மகிழ்ச்சி என்பது என்ன?.. கட்டிலின் ஒரு கால் உடைந்தது.. ஆனாலும்.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular