நம் குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்கிறோம், எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை எவ்வளவுதான் முயற்சியை போட்டு வேலை செய்தாலும் அதில் நாம் குறிக்கோளை நோக்கி இல்லை என்றால் வீணாகிவிடும். நாம் செய்யும் வேலைகள் கவனச் சிதறல் இன்றி நாம் குறிக்கோளை நோக்கி இருக்கிறதா என்பது மிகவும் முக்கியம். அதேபோல் விரைவில் வெற்றி அடைய முடியும் இதை புரிந்து கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்…

ஒரு ஊரில் துப்பாக்கி சுடும் போட்டி ஒன்று நடந்தது அதில் ஒருவர் 10 முறை துப்பாக்கியால் சுட்டார் இன்னொருவர் ஒரே ஒருமுறை சுட்டார் ஆனால் பரிசு கிடைத்ததோ ஒரு முறை துப்பாக்கி சுட்டுவர்க்கு தான்..

உடனே பத்து தடவை துப்பாக்கி சுட்டவருக்கு கோபம் வந்துவிட்டது அவர் போட்டியில் நடத்துபவரிடம் சென்று சண்டை போட்டார் என்ன இது நான் தானே அதிக முறை துப்பாக்கி சுட்டேன் எனக்கு தானே பரிசு தரவேண்டும் என்று கேட்டார் அதற்கு அந்த போட்டியை நடத்துபவர் சொன்னது அப்பா நீ 10 முறை துப்பாக்கி சுட்டாலும் மையப் புலியை சுற்றியுள்ள இடத்தில் தானே சுட்டாயே தவிர மையப்புளியில் சுடவில்லை. அவர் ஒருமுறை சுட்டாலும் மையப்புள்ளியில் சரியாக குறி வைத்து சுட்டார் இதனால் தான் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது என்றார். இந்த கதையில் சொன்னது போல சிலர் நிறைய நேரம் செலவழித்து ஒரு குறிக்கோளிற்காக முயற்சி செய்திருந்தாலும் வெற்றியடைய தாமதம் ஆகுவதற்கான முக்கிய காரணம் இதுதான் எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறோம் என்பது நம் வெற்றியை நிர்ணயிக்காது. நாம் செய்யும் காரியத்தில் கவனசிதர்கள் இன்றி எவ்வளவு மணி நேரம் எத்தனை வேலைகள் நம்முடைய குறிக்கோளை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாகும் எனவே நன்றாக யோசித்து குறிக்கோள் சார்ந்த வேளையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இதை தெளிவாக புரிந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி அடைவது சுலபமாகிவிடும். முயற்சித்து செய்யுங்கள்..!!

Read Previous

நீடிக்கும் மகிழ்ச்சியின் ரகசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா…!!

Read Next

நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டுமா அஜித் சொல்லும் ரகசியம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular