
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எள்ளுருண்டை என்பது தினசரி வாழ்க்கையின் சிற்றுண்டியாக இருந்தது. ஆனால் இன்றோ அரிதாக இருக்கிறது அதை பார்ப்பதே. இன்றைக்கும் எள்ளுருண்டை கிடைக்கிறது ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்த சுவை இப்போது இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் வீட்டிலேயே நம் தாத்தா பாட்டி காலத்தில் பாட்டி செய்து கொடுத்த சுவையில் எள்ளுருண்டை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எள்ளுருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
எள் – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
செய்முறை:
முதலில் எள்ளைக் களைந்து ஒரு துணியில் பரவலாக விரித்து ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடைப்பில் வைத்து எள்ளை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டு எள் சிவந்து வெடிக்க ஆரம்பிக்கும்போது அதை இறக்கவும். வெள்ளத்தை நன்றாக தட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து கிளறிவிட்டு பாகு முத்தம் பழத்திற்கு சிறிது எடுத்து ஒரு தட்டில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து கையில் எடுத்து உருட்டினால் உருண்டையாக வரும் அந்த பதத்திற்கு வந்ததும் இறக்க வேண்டும். பின்பு எல்லை சேர்த்து கிளறி கை பொறுக்கும் சூடு வந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டினால் சுவையான எள்ளுருண்டை தயார்.