• September 12, 2024

நயன்தாராவை இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்த கவின் – வைரல் போட்டோ..!!

தமிழ் சினிமாவில் சீரியல் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கவின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி இன்று நட்சத்திர நடிகர் ஆக உயர்ந்திருக்கிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக கவினுக்கு நல்ல நல்ல திரைப்படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிகர் கவின் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் இணைத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் கவின் உடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். தன்னைவிட மூத்த வயதான பெண்ணை கவின் காதலிப்பதாக கதை அமைந்துள்ளது .இந்நிலையில் தற்போது கவின் நயன்தாராவுடன் நெருக்கமாக நின்று ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

Read Previous

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்..!! மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

கடன் சுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular