நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகி விடக்கூடாது : திமுக கூட்டணியில் தொடர்வோம். தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்..!!

நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகி விடக்கூடாது என்று திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் அண்மைக்காலமாக அரசியல் அரங்கில் நம்முடைய நிலைபாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல் நிகழ்ந்து வருகின்றன பல்வேறு ஊடகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடக தளங்கள் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர், அதாவது அரசியல் அடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம், அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருப்பது ஒரு காரணம் அதுவே முதன்மையான காரணமாகும் இக்கூட்டணியை சிதறி அடிக்க திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாக பயன்படுத்த முனைகின்றனர்,அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பு ஆகும், குறிப்பாக திமுகவை பிடிக்காதவர்கள் திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பை கண்டு எரிச்சலடைய கூடியவர்கள் நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம் இவர்களில் கட்சி அடையாளம் இல்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் உள்ளனர், இவர்கள் கடந்த 2019 நாடாளுமன்ற பொது தேர்தலில் இருந்து இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், இவர்களில் சிலர் அப்பப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர், அவற்றிற்கு பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கி வருகிறோம் கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம், மேலும் நம்மை இகழ்ந்து பேசி பிழைப்போர் பிழைக்கட்டும். எள்ளி நகையாடி நகைப் போர் நகைக்கட்டும் நமது இலக்கில் நாம் குறியாக இருப்போம் நமது களத்தில் என்றும் உறுதியாக நிற்போம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்..!!

Read Previous

காதின் கதை ஒரு முறையேனும் படியுங்கள் மனதில் குருகுருப்பு உண்டாகும்…!!!

Read Next

புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு ஆண்டுதோறும் 27 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம் : அதிகாரிகள் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular