
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் பேசிய போது எங்கள் பகுதிகளில் சாக்கடை மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளது என்று கூறினார். நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் உடனடியாக கவுன்சிலர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் கூறினார் இதனையடுத்து கூட்டம் முடிவு பெற்றது.