பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் உள்ள இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜூலை எட்டாம் தேதி ரஷ்யா சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை குறித்து மாஸ்கோவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருதில் இருப்பவை “இந்திய பிரதமர் ரஷ்யா வருகை மேற்கத்திய நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. பொறாமை உணர்வோடு உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆனால் எங்களுக்கு இந்திய பிரதமர் மோடியின் இந்த பயணத்தை நாங்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நல்லுறவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணமாக கருதுகிறோம். இந்திய பிரதமரின் இந்த பயணத்தில் இருநாட்டு தலைவர்களும் பிரத்தியேகமாக சந்தித்து பேச உள்ளனர்”, என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு கடந்து 2021 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது .அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தந்தார். இதை தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த உச்சி மாநாடு ஜூலை 8 மற்றும் 9 ஆகியிருந்த தினங்களில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா -உக்கிரேன் போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்ய பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உலக நாடுகளுக்கு இடையே இந்திய பிரதமரின் இந்த ரஷ்ய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.