நர்மதை ஆற்றில் புனித நீராடிய ஏழு பேர் மாயம்..!! காவல்துறையினர் விசாரணை..!!

நர்மதை ஆற்றில் புனித நீராடிய ஏழு பேர் மாயம். வந்த தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் போயிச்சா கிராமத்தில் உள்ள நர்மதை ஆற்றில் இன்று மதியம் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏழு பேர் ஆற்றில் மூழ்கி மாயமானார். உடனே அங்கிருந்த உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் குதித்து காணாமல் போனவர்களை தேட ஆரம்பித்தனர். பின் இது குறித்த தீயணைப்பு படையினருக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூரத்தில் இருந்து வந்த 17 பேர் கொண்ட குழு ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு நர்மதை நதியில் புனித நீராடிய போது ஏழு பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Read Previous

கொதித்தெழுந்த நடிகை ராதிகா சரத்குமார்..!! ”ஏன்டா படுபாவி ஜெயிலுக்கு போய் நீ திருந்த மாட்டியா..?”

Read Next

பொதுமக்களை விடாத துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்..!! ஐந்து பேர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular