எத்தனையோ கோபக்காரர்கள் சாதுக்களாக மாறி நற்பெயர் எடுக்கும் போது நாம் ஏன் முயலக்கூடாது நல்லவர்களாக வாழ வேண்டும் என்று முடிவெடுங்கள் திரும்பத் திரும்ப அது பற்றிய சிந்தியுங்கள். நிச்சயமாக உங்களால் நல்லவர்களாக மாற முடியும்..
நல்ல காரியங்களை செய்வதை விட நல்ல காரியங்களை செய்வதற்கு காரணமாக இருப்பவரே உயர்ந்தவர் என்கிறது ஒரு பழமொழி ..
நல்லவர்களுக்கு கிடைக்கும் நட்புகளையும் எண்ணிப் பாருங்கள் அப்படியே ஆக வேண்டும் என்ற ஆசை உள் மனதில் எழும் தவறு செய்தவர்களை இந்த உலகம் தவறு செய்தவர்களாகவே எண்ணும். அவர்கள் திருந்தி வாழ்ந்தாலும் அவர்களை உலகம் நல்லவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள தயங்கும் உங்கள் மனதிலாவது நீங்கள் நல்லவர் என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள் தனக்குத்தானே நல்லவனாக இல்லாத ஒருவன் மற்றவர்களுக்கு எப்படி நல்லவனாக இருக்க முடியும்..
ஊர் உலகம் என நினைத்தால் உங்களுக்கு என்ன உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உங்களுக்கு நீங்கள் தான் நீதிபதி என்பதை மனதில் கொள்ளுங்கள் அதே உலகம் உங்களது அடக்கமான அமைதியான வாழ்வை பார்த்து ஆச்சரியப்படட்டும் பின்னர் புகழாரம் சூட்ட ஆரம்பிக்கும்..
மனதளவில் நல்லவர்களாக ஆகிவிட்டால் செயலும் நல்லதையே செய்ய முயலும் உங்களது மனோபாவங்களை உங்களது கட்டுப்பாட்டில் வைக்க முயலுங்கள் நல்லவர் பட்டம் நாளும் தொடரும்…!!