நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும் வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில் கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்..??

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும் வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில் கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்?

இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள். எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமா மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசிர்வாதமும் அனுகிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது. உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால், உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும் வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும் சொந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால் அப்பா ஸ்தானம் சூரியன். அம்மாவை மதிக்கவில்லை என்றாலும் அவர்களை அவமானப்படுத்தி பேசினால் கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும் அறிவாற்றல் மங்கி போகும் குழப்பமான வாழ்க்கை வாழ தொடங்குவீர்கள் மன நிம்மதியே இருக்காது. ஏனென்றால் அம்மாஸ்தானத்தை குறிப்பது சந்திர பகவான். நீங்கள் கணவனாக இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும் மனைவிக்கு மரியாதையில்லை என்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை .வீடு, மனை, வாகனம் சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டும் என்றால் மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியிடத்தை குறிப்பது சுக்கிரன். நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்க வேண்டும் உங்கள் கணவர் இடத்தை குறிக்கிறது குரு. வீட்டில் உள்ள நிலை நிலவ சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள் கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், தாய் மாமன் அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும் தாய் மாமன் அத்தை ஸ்தானத்தை குறிப்பது புதன் பகவான் சகோதர சகோதரிகளை இழிவாக பேசினால் செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது உங்களால் ஆடம்பர பொருட்கள் நிலம் வீடு போன்ற சொத்துக்களை கட்டாயம் சேர்க்க முடியாத அளவு வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும் கணவனாக இருந்தால் மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்க வேண்டும். மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரிகளும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும் இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது, கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள் ஆகவே இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சண்டை போட்டாலும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல் இருப்பதை தவிர்த்து அவர்களுடன் அன்புடன் பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி அதன் மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம். ஆக கிரகங்கள் நல்லா இருப்பதும் சரி இல்லாமல் போவதும் நம் நடத்தையில் உள்ளது கோயில்களில் உள்ள நவகிரகத்தை சுற்றுவதோடு சுற்றத்தையும் சுற்றுங்கள். குற்றம் பார்க்காமல் ..

Read Previous

பொதுநலன் கருதி..!! இந்த பதிவு பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு..!! அனைவரும் படிக்கவும்..!!

Read Next

உங்கள் வீட்டு சமையலறையில் அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி எடுக்கவே கூடாது..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular