செப்டம்பர் 9 இன்று காலை தயாரிப்பாளர் மற்றும் நல்ல மனிதர் டில்லி பாபை தமிழ் திரை உலகம் இழந்துவிட்டதாக இயக்குனர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்…
மரகத நாணயம் ராட்சசன் மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று இறந்துள்ள செய்தி இன்று காலை எனது காதுக்கு கேட்டதும் எனக்கு பெரும் துயரம் தந்துள்ளதாக இயக்குனர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார், இந்த அதிர்ச்சியான செய்தியுடன் காலை எழுந்தேன் நல்ல மனிதரை இழந்து விட்டோம் அதனைத் தாண்டி நல்ல நண்பரை இழந்து விட்டோம் என்று வருத்தம் என்னை சோகப்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார், எல்லோரிடம் மிக நட்பாகவும் தனது சினிமா துறையில் சாதிக்க வேண்டிய எண்ணமும் அவரிடம் அதிகம் உள்ளது அப்படிப்பட்ட நல்ல மனிதரிடம் இந்த மரணம் வந்து சேர்ந்தது என்ற சோகத்தோடு பேசிய இயக்குனர் தனஞ்ஜெயன், மேலும் திரை உலகமே நேரில் சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..!!




