
முருங்கை என்றாலே இரும்புச்சத்தும் புரதத்சத்தும் கால்சியமும் தான் முக்கிய சத்துக்களாக பெரும்பாலானோர் நினைவில் வரும். பொதுவாகவே அசைவ உணவுகளில் இரத்தத்தில் அதிக இரும்புச்சத்து இருக்கும்.
முருங்கை பிசின் கிட்டத்தட்ட முருங்கை இரத்தத்திற்கு சமமாக கருதப்படுகிறது. .ஏனெனில் மரத்தில் எங்கேனும் காயம் படும் இடத்தில் தான் இயற்கையாகவே பிசின் வடியும். முருங்கை பிசினை பாரம்பரிய மருத்துவத்தில் தங்கத்துடன் ஒப்பிடுவர்.உள்ளிருக்கும் சத்துக்களாலானது அவ்வளவு மதிப்புமிக்கதாகும்.
முதலில் நாம் முருங்கை பிசினை தனியே பிசினாகவே கொடுத்து வந்தோம். தற்போது பிசினை தேனில் ஊறிய வடிவில் கொடுக்கிறோம். உட்கொள்ள எளிய வழியிலிருக்கும் சுவை மற்றும் சத்து மிகுந்த தேன் முருங்கை பிசினின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
கைகால் குடைச்சல் குறையும்,ஆற்றல் மற்றும் திண்மை அதிகரிக்கும்,விந்து எண்ணிக்கை அதிகரிக்க உதவும், மூட்டு வலி குறைய உதவும், உடலை வலுப்பெறச் செய்யும், நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும், எலும்புகளை உறுதியாக்க உதவும்,
இருதய நோயை தவிர்க்க உதவும்,மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க உதவும், மலச்சிக்கலைக் குறைக்கும். இதுபோன்ற பல பலன்களை தேன்முருங்கை பிசின் கொண்டிருக்கிறது. தேனில் ஊறிய பிசின் என்பதால் நேரடியாக உட்கொள்ளலாம். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் அல்லது இரவு உறங்கும் முன் உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.