நல்ல தூக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
இந்த நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக தூக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல பேர் இரவில் மொபைல் போன்றவற்றை பார்த்துக் கொண்டு தன் தூக்கத்தை தொலைத்து தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நல்ல தூக்கத்திற்கு எதை செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ காபி குடிக்க கூடாது. அதிக உணவை உண்ண வேண்டாம். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக புகை பிடிக்காதீர்கள். தூங்கும் இடத்தில் சாப்பிடுவது படிப்பது விளையாடுவது போன்ற வேலைகளை செய்யாதீர்கள்.
முக்கியமாக பகலில் தூங்க கூடாது. படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஸ்கிரீன் டைம் டிவி கணினி வைத்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அன்றாட வேளையில் ஒரு நிலையான வழக்கத்தை பின்பற்றுங்கள். அதில் தூக்கம் எழுதல் உடற்பயிற்சி நேரம் எல்லாமே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.




