ரெயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான என்ஜினியர்கள், வேதியியல் பட்டதாரிகள், பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்தவர்கள் நவ.11ஆம் தேதிக்குள் https://www.rites.com/Career என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.




