நள்ளிரவில் பதம்பார்த்த நாய்கள்..!! 9 ஆடுகள் பலி., 6 ஆடுகள் படுகாயம்.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த 40 செம்பரி ஆடுகளை நாய் கடித்து குதறி உள்ளது.இதில் 9 ஆடுகள் பலியாகி உள்ளது, மேலும் 6 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது.  இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியாம்பரை  பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 50). இவர் விவசாயி ஆவார். இவர் சொந்தமாக தனது தோட்டத்தில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஆடுகளை பட்டியல் அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு வந்து பின் காலையில் ஆட்டுப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தன.

ஆறு ஆடுகள் படுகாயத்துடன் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கால்நடை மருத்துவர் தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவர் தேவேந்திரன்  நாய் கடித்து ஆடுகள் பலியாகி இருப்பதனை உறுதி செய்தார். இவ்வாறு நள்இரவில் அடைத்து வைத்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

பிறந்தநாள் விழா கலவரத்தில் காதை கடித்து துப்பிய வாலிபர்..!! விழுப்புரத்தில் பயங்கரம்.!!

Read Next

7 மாத டியூசன் காதல்..!! கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular