நள்ளிரவில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!! படுகாயமடைந்த போலீசார்..!!

நடிகர் வேல ராமமூர்த்தி, கனிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா எச்.

எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா, காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்திய எபிசோடுகள், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் வேல ராமமூர்த்தி, கனிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா எச். ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியல் அவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்துள்ளது.

இதனிடையே நடிகை மதுமிதா தனது ஆண் நண்பருடன் காரில் செல்லும்போது, விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில், ஒன்வே சாலையில், தவறாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மதுமிதா மற்றும் அவரது நண்பரிடம் விசாரித்தபோது, போலீஸ் மீது குற்றம் சுமத்தியதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து நடந்து 2 நாட்கள் ஆகியும், மதுமிதா இதுவரை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, தற்போது இந்த விபத்து தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Previous

பராசக்தி படத்தில் இருந்து சிவாஜியை நீக்க சொன்ன ஏவிஎம் மெய்யப்ப செட்டியார்.. ஏன் தெரியுமா?..

Read Next

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 10 பைசா சரிவு: ஒன்றுக்கு ரூ.5.10 ஆக நிர்ணயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular