
நமது உடலுக்கு ஆரோக்கியம் தரம் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் சிறுதானியங்களை வைத்து அடை செய்து சாப்பிடுவது எப்படி என்று இந்த பதிவில் காண்போம். இதை சாப்பிட்டால் நமது உடலுக்கு தேவையான சக்தி மற்றும் நோயற்ற வாழ்க்கை சுலபமாக கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு, கம்பு, சோளம், கொள்ளு, பாசிப்பயறு, சாமை, குதிரைவாலி, வரகரிசி – தலா 1/4 கிலோ,
தோலுடன் இருக்கும் கருப்பு உளுந்தம் பருப்பு – 4 கரண்டி
முருங்கை கீரை – 1 கைப்பிடி அளவு கொண்டைக்கடலை – 4 கரண்டி வெங்காயம் – 2
இஞ்சி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 8
பூண்டு – 10 பற்கள்
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுத்து கம்பு கேழ்வரகு சோளம் கொள்ளு பாசிப்பயிறு சாமை அரிசி வரகு அரிசி கருப்பு உளுந்தம் பருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை நன்றாக கழுவி 12 மணி நேரம் ஊற வைக்கவும். இவை ஊறியதும் வெள்ளை துணியில் கட்டி முளை கட்டும் வரை காத்திருக்க வேண்டும்.
அடுத்த நாள் வெங்காயம் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து முருங்கைக் கீரையை அதில் கலந்து தோசை போல சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான நவதானிய அடை தயார்.