நவம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் வெளியீடு..!!

நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தின விடுமுறை நாட்களை சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வகையில், அக்டோபர் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், தற்போது நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்தான பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை தினம் வருவதால் வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை காணலாம்.

 • நவம்பர் 1- புதன்கிழமை -கரக சதுர்த்தி, புதுச்சேரி விடுதலை நாள், ஹரியானா தினம், கர்நாடக ராஜ்யோத்சவா, கேரள பிறவி கரக சதுர்த்தி காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
 • நவம்பர் 5 -ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
 • நவம்பர் 10 – வெள்ளிக்கிழமை – வாங்கலா திருவிழா காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
 • நவம்பர் 11 : இரண்டாவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
 • நவம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை – தீபாவளி பண்டிகை காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நவம்பர்
 • 13- திங்கட்கிழமை – கோவர்தன் பூஜை காரணமாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பீகார், டெல்லியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
 • நவம்பர் 14 – செவ்வாய்கிழமை பலிபிரதிபாதா காரணமாக பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
 • நவம்பர் 15- புதன்கிழமை பாய் துஜ் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
 • நவம்பர் 19 -ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
 • நவம்பர் 23- வியாழன்கிழமை செங் குட் ஸ்னெம் காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
 • நவம்பர் 25: நான்காவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
 • நவம்பர் 27 – திங்கட்கிழமை குருநானக்கின் பிறந்தநாள், கார்த்திக் பூர்ணிமா காரணமாக பஞ்சாப், சண்டிகர், கார்த்திக் பூர்ணிமா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
 • நவம்பர் 30- வியாழன்கிழமை கனக தாச ஜெயந்தி காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

Read Previous

கணவன் மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் போதுமாம்..!!

Read Next

EPFO உறுப்பினர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular