நவரத்தினங்கள் உலகில் எப்படி தோன்றின என்று உங்களுக்கு தெரியுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

நான் அணியும் நவரத்தினங்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன அவர்கள் எப்படி பார்த்து வாங்கி அணிய வேண்டும் அப்படி அணிவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று சுவாரசியமான விஷயங்களை ஒரு கதையின் மூலம் இந்த பதிவில் காண்போம்..

வளவன் என்னும் அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் செய்து வந்தான். அவனது தவத்தை முக்கண் மூர்த்தி மகிழ்ந்து ஏற்று அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு வளவன். நான் யுத்தத்தில் சாக வரவேண்டும் அங்கனம் விதியாள் இறப்பின் எனது உடல் எவரும் விரும்புகின்ற நவமணிகளாக வேண்டும் என வரம் கேட்டான். சிவ மூர்த்தியும் அவ்வாறே வரம் அளித்து சென்றார்..

இவ்வாறு பெற்ற வளவ அசுரன் தேவர்களை வருத்தி வந்தான். இவனை உபாயகத்தினால் வெல்ல எண்ணிய இந்திரன் வளவ அசுரனிடம் அரசனே நீ மகா வல்லவன் உன்னுடன் நான் நட்பு கொள்ள விரும்புகிறேன் என்று பயந்தால் போல கூறி உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று கூறினான் இந்திரன் இவ்வாறு சொல்ல வளவன் இந்திரனிடம் அட இந்திரா நீயா எனக்கு என்ன வரவேண்டும் என்று கேட்டாய் உன்னிடம் வரம் கேட்கும் நிலையில் நான் இல்லை உனக்கு என்ன வரம் வேண்டும் என்று என்னிடம் கேள் நான் உனக்கு தருகிறேன் என்றான். இந்திரன் நீ இம்மை மறுமைக்கும் புகழை நிறுத்தி எனக்கு யாகப் பசுவாக ஆகுக என்று வளவனிடம் வரம் கேட்க அவ்வாறே வளவன் இந்திரனின் யாக பசுவாக ஆயினான். இவனது உடல் விலை உயர்ந்த ரத்தினங்கள் ஆயின இந்திரனுக்கு யாக பசுவான வல்லவனின் ரத்தம் மாணிக்கங்கள் ஆயின பருக்கள் முத்துக்களாயின, மயிர்கள் வைடூரியம் ஆயின, எலும்புகள் வைரமாயின, பித்தம் மரகதம் ஆயின, நிணம் கோமேதமாயின, தசைகள் பவளம் ஆயின கண்கள் நீளமாய் என காபம் புஷ்பராகம் ஆயிற்று இவற்றின் இடங்களுக்கு நிறங்களும் பிரிவுகளும் தெய்வங்களும், ஒளிகளும் குற்றங்களும் பயன்களும் பல்வேறு விதத்தில் காட்சியளித்தது..

வைரமுத்து ஒரு பிரிவு மாணிக்கம் பவளம் ஒரு பிரிவு, புஷ்பராகம் வைடூரியம் கோமேதகம் ஒரு பிரிவு, மரகதம் நீளம் ஆகிய ஒரு பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது..

முத்து வைரம் பச்சைகள் ஆகிய சாத்வீக குணம் உடையன என்றும் பவளம் மாணிக்கம் கோமேதகம் ஆகியன இராட்ச குணமுடையன என்றும் நீலக்கல் தாமச குணம் உடையன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரத்தினங்களை பரீட்சை செய்து அதன் மதிப்பு என்ன விலை என்று கூறுவோர் திங்கட்கிழமை அன்று முத்தினையும் வைடூரியத்தையும் செவ்வாய்க்கிழமை என்று பவளத்தினையும் புதன்கிழமை என்று பச்சைக் கல்லையும் வியாழக்கிழமை அன்று புஷ்பராகத் திணையும் வெள்ளிக்கிழமை அன்று வைரத்தினையும் சனிக்கிழமை அன்று நீலக் கல்லையும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாணிக்கம் மற்றும் கோமேதகல்லையும் மதித்து விடை கூற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்குரிய நாட்களை தவிர மற்ற நாட்களில் அதனை மதிப்பீட்டு விலை கூடுதல் கூடாது என்பது ஐதீகம். இவற்றில் மாணிக்கத்தில் புள்ளி கீற்று வேற்று நிறச்சார்பு தாரசம் என்கிற குற்றம் இல்லாததை அணிந்தால் பகை வென்று விஜயலட்சுமி நேசனாவான் என்று கூறப்பட்டுள்ளது. அவனை துஷ்ட தேவதைகள் மற்றும் மிருகங்கள் வியாதி பாப கிரகங்கள் எதுவும் அண்டாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. முத்து நட்சத்திரம் போல் ஒளிமிக்காத இருக்க வேண்டும் என்றும் வைரம் உறுதியானதாய் மரகதம் பொன்வண்டு நிறத்தினை உடையதாகவும் பவளம் திருக்கல் கோணல் புழு அரித்தல் முகம் ஒடிதல் போன்றவை இல்லாததாகவும் இருப்பதை பார்த்து அணிந்தால் புத்திரலாபம் சகல ஐஸ்வரியம் தீர்க்க ஆயுள் போன்றும் என்று கூறப்பட்டுள்ளது..!!

Read Previous

30 வருட தோசைக்கல் 3 நிமிடத்தில் பளிச்சென்று மாறும் : கொஞ்சம் கல் உப்பு தூவி விட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..!!

Read Next

குடும்பத்தில் செல்வ வளம் பெறுக வெள்ளி மோதிரத்தை இந்த விரலில் அணிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular