புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி விழா ஆரம்பமாகி, அன்றிலிருந்து 9 நாட்கள் விழா கொண்டாடப்படும். நவராத்திரி விழா அம்பிகைக்காக கொண்டாடப்படுவது. இந்த 9 நாட்களும் விரதமிருந்து பூஜை செய்து அம்பிகையை வழிபட்டு வந்தால், வாழ்வில் நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் நாளை 6ம் நாள் முக்கிய பூஜை செய்யும் முறை குறித்து இப்பதிவில் காணலாம்.
நாளை செவ்வாய் கிழமை 6ம் நாள் பூஜையில், கொலுவில் உள்ள பொம்மைகளுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பின் பிரசாதமாக 3 வகையான உணவுகள் தயார் செய்து அதனை அம்பிகை முன் படைத்து , அதில் தீர்த்தம் தெளித்து பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக அரிசியில் வெல்லத்தை கலந்து, அதனை வாசலின் ஓரத்தில் தூவி வைக்கவேண்டும். இறுதியாக கற்பூரம் காட்டி 3ம் கட்ட பூஜையை நிவர்த்திசெய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், அம்பிகையின் அருள் முழுமையாக குடும்பத்திற்கு கிடைக்கும்.




