
இன்றைய நிலையில் உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுவர் எலான் மஸ்க். இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.பல பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்.
ட்விட்டர் கணக்கில் புளூடிக் பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ட்விட்டரில் லாபத்தை அதிகப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இருந்தாலும் தனது பணத்தை இழந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தில் 15 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார். ஆனால் ட்வி்ட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 4400 கோடி டாலரை செலவிட்டார். ட்விட்டரை வாங்குவதற்கு பங்குகளை விற்றது, அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிவு, ட்விட்டரில் பிரச்சினைகள் என எலான் மஸ்கிற்கு சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது
இது குறித்து அவர் சொல்லுகையில் எதிர்மறையான பல பணப்பழக்கத்தினால் தான் நாங்கள் இப்போது இருக்கிறோம். 50% வருவாய் குறைந்து உள்ளது. அதிக கடனும் உள்ளது.
இதனால் எனது பணம் ட்விட்டரில் இழந்து கொண்டே வருகிறது. நேர்மறையான பணப்பழக்கத்தை அடைய நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம் என்றுக் கூறியுள்ளார்.