நாகர்கோவில் எஸ். பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!!

நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு பெண் தனது உறவினர்களுடன் மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அங்கு பணியில் இருந்த பெண் போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்னர் அவரை சமாதானம் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பறக்கை வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சுதா வயது 42 என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவருடன் வந்த உறவினர்கள் கூறும்போது, சுதாவின் முதல் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். பின்னர் அவரை இலந்தவிளையை சேர்ந்த ஒரு வைத்தியருக்கு 2-வது திருமணம் செய்து வைத்தோம். சில மாதங்களில் 2-வது கணவர் இறந்துவிட்டார். பின்னர் 7 ஆண்டுகள் தனியாக இருந்தவரை வண்டிகுடியி ருப்பை சேர்ந்த 43 வயதுடைய மிட்டாய் கடை தொழிலாளி கடந்த தீபாவளி அன்று உறவினர்கள் முன்னிலையில் 3-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் சுதாவை கடுமையாக தாக்கி சித்ரவதை செய்து வருகிறார். ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துவிட்டு சித்ரவதை செய்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் சுதாவுக்கு போலீசார் அறிவுரை கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைத்தனர்.

Read Previous

#BREAKING: சென்னையில் பேருந்துகள் முழுமையாக இயக்கம்..!!

Read Next

VIDEO: வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த காவலர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular