
துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் பங்கேற்றார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் தெற்கு தெரு பகுதியில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்டச் சேர்மேன் தர்மன் ராஜேந்திரன் அவர்கள் பூமி பூஜை நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் துறையூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை சரவணன் ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.