இன்றைய காலகட்டங்களில் மக்களிடையே பெரும்பாலும் பக்தி கண்ணோட்டமே அதிகம் இப்படி இருக்கையில் நாக பஞ்சமி அன்று தெய்வத்தை வணங்குவதால் நல்லது நடக்குமாம்.
நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வணங்குவதாகும், வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் நாக தெய்வங்களை வணங்கினால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வங்கள் என வளம் பெறும் என்று நம்பப்படுகிறது, நாக தேவதைகளை வணங்குவதால் நாகங்களிடம் கடிப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நம்பப்படுகிறது, நாகங்கள் வயல் காடுகளின் இருப்பதனால் அதை விவசாயத்தை சார்ந்த தெய்வமாகவும் வழிபடுகின்றனர், கோவில்களில் நாகங்களுக்கு மஞ்சள்,பால், முட்டை, குங்குமம் என வைத்து வணங்குவதும் இப்படி வணங்குவதினால் திருமண பாக்கியம் புத்திரவாக்கியம் மற்றும் குடும்பங்களில் சண்டை சச்ரவுகள் நீங்கி அமைதி நிலவும் என்று ஐதீகம் கூறுகிறது..